“பி.கே.பி-யை இனி செயல்படுத்த தேவையில்லை” – டாக்டர் மேடலைன் பெர்மா.!

PKP in Malaysia
Image tweeted by EdgeProp Malaysia

மலேசியாவில் இனி பி.கே.பியை செயல்படுத்த அவசியம் இருக்காது என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தை சார்ந்த டாக்டர் மேடலைன் தெரிவித்துள்ளார். (PKP in Malaysia)

இதற்கு முன்பு மலேசியாவில் PKP அமலில் இருந்தபோது நாட்டின் பொருளாதாரம் 17 சதவிகிதம் குறைந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். (PKP in Malaysia)

“மைசெஜாத்தெரா-வில் பதிவு செய்து தடுப்பூசி பெறலாம்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.!

தற்போது நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியதால், இனி PKP அமலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் PKP-யை இந்த நிலையில் திரும்ப பெறுவதன் மூலம் வீழ்ச்சியில் இருக்கும் பொருளாதாரத்தை நம்மால் மீட்டெடுக்க முடியும் என்றும் அறிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது மலேசியாவில் SOP-க்களை மீறுவோருக்கு அபராதம் RM1000-ல் இருந்து RM10000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் விதிகளை அதிகமாக மீறும்பட்சத்தில் RM50,000 அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.

தற்போது மலேசியாவில் படிப்படியாக கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருகின்றது. நேற்று 1924 பேர் மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் நேற்று ஒரே நாளில் 3752 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தற்போது தடுப்பூசி அளிக்கும் பணி தொடங்கியுள்ளதால் PKP-யை தளர்த்துவது பொருளாதாரத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தை சார்ந்த டாக்டர் மேடலைன் இதையே முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram