“1 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்கும் அபாயம்” – சிங்கப்பூருக்கு கோரிக்கை விடுத்த ஜோகூர் அரசு.!

Johor
Image Courtesy Aisa One

வேலை இல்லா திண்டாட்டம், உலகில் உள்ள பல நாடுகளின் இந்த நோயின் காரணமாக பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆம் கொரோனா போல வேலை இல்லா திண்டாட்டமும் ஒரு நோய் தான். பொருளாதாரத்தில் உச்சத்தில் உள்ள நாடுகளிலும் கூட இந்த வெளியே இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.

இந்த இக்கட்டான சூழலில் இடையில் வந்து இறங்கி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து வருகின்றது இந்த கொரோனா.

கொரோனா காரணமாகி ஏற்கனவே உச்சத்தில் இருந்து வேலை இல்லா திண்டாட்டம் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “தொடர்ந்து உச்சத்தில் உள்ளூர் தொற்று” : Sabah பகுதியில் 64 பேருக்கு உறுதியான கோவிட் 19..!

குறிப்பாக வரலாறு காணாத அளவில் மலேசியாவின் ஜோகூர் பகுதியில் வேலை இழப்பு சதவிகிதம் வரலாறு காணாத அளவில் 18 விழுக்காடாக இருக்கின்றது என்று அப்பகுதி முதல்வர் ஹஸ்னி முஹமது தெரிவித்துள்ளார்.

தற்போது 35,000 பேர் வேலை இல்லாமல் தவித்து வரும் நிலையில் இந்த நிலை நீடித்தால் 1 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான போக்குவரத்து முழுமையாக திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்ச் மாத தொடக்கத்தில் எல்லைகள் மூடப்பட்ட நிலையில் உள்ளூர் வர்த்தகம் 5 முதல் 10 சதவிகிதம் குறைந்தது என்று குறிப்பிடத்தக்கது என்று முஹமது குறிப்பிட்டார். தற்போது மிக குறைந்த அளவிலான மக்களே பயணித்து வருவதால் விரைவில் எல்லைகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் ஜோகூர் பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram

Related posts

‘ஜோஹோர் பரு ரயில்பாதை’ – விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்

Web Desk

‘யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை’ – மலேஷியா இடைக்கால பிரதமர்

Web Desk

மலேசியா : “விமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டும்..?” – MATTA

Web Desk