“தொடர்ந்து உச்சத்தில் உள்ளூர் தொற்று” : Sabah பகுதியில் 64 பேருக்கு உறுதியான கோவிட் 19..!

Sivagangai Cluster
Picture Courtesy says.com

உலக அளவில் பல நாடுகளில் குறிப்பாக அண்டை நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவின் வேகம் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

அங்கெல்லாம் கணிசமான முறையில் தொற்று அதிகரித்தே வருவது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா பரவளில் அமெரிக்கா தொடர்ந்து முதிலிடம் வகிக்க, இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் குளிர்காலத்தை நினைவில் கொண்டு அண்மையில் மலேசிய அரசு ஒரு அதிரடி சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தது.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தோனேஷியா உள்ளிட்ட 23 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு முற்றிலுமாக தடையை விதித்து ஆணையிட்டது.

இதையும் படிங்க : “கடற்பாலத்தை கடக்க உதவும் நடைபாதை” – மலேசிய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் ஜோகூர் அரசு.!

ஆனால், இந்த தடை குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து மலேசிய அரசும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தங்களது தரப்பில் தெரிவித்தது. அதனை தொடர்ந்து சில தளர்வுகளையும் மலேஷியா அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட சில விசாக்களுக்கு அனுமதி அளித்த நிலையில் பிற நாடுகளில் இருந்து மக்கள் மலேசிய திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மலேசியா திரும்பிய மூன்று வெளிநாட்டவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது.

மேலும் ஒரே நாளில் 79 பேருக்கு உள்ளூரில் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மலேசியாவில் பாதிப்பு எண்ணிக்கை 10769 ஆக உள்ளது. மேலும் 9785 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதுவறை மலேசியாவில் இந்த நோய் காரணமாக 133 பேர் பலியாகி உள்ளனர். sabha பகுதியில் தான் தற்போது அதிக அளவில் தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram