“வெளிநாட்டு பயணிகளை வரவேற்க ஜோகூர் தயாராகவுள்ளது” – ஓன் ஹஃபிஸ் கஸி.!

Johor and Singapore
Image Courtesy The Star

தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதால் சிங்கப்பூர் பயணிகளை வரவேற்க தயாராக உள்ளது ஜோகூர் என்று விளையாட்டுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். (Johor and Singapore)

ஜோகூர் மாநிலத்தின் சுற்றுப்பயண மற்றும் விளையாட்டுத்துறை தலைவர் ஓன் ஹஃபிஸ் கஸி இதனை தற்போது தெரிவித்துள்ளார். (Johor and Singapore)

“விரைவில் மலேசிய எல்லைகள் திறக்கப்படலாம்” – அமைச்சர் நான்சி ஷுக்ரி.!

ஏற்கனவே மலேசியாவில், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை ஜோகூர் அரசு, மலேசிய அரசுக்கு வைத்துள்ளது. மேலும் தடுப்பூசி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அந்த அரசு தெரிவித்தது.

ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது வெளியிட்ட அறிக்கையில், இந்த யோசனை பல நன்மைகளை தரும் என்று தெரிவித்தார்.

மலேசிய – சிங்கப்பூர் இடையேயான பயணம், கொரோனா தொற்று காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசி பெற்றோரை அனுமதிக்கும் முடிவு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாட்டிற்கு இடையேயான பயணம் குறித்தும் ‘தடுப்பூசிக் கடப்பிதழை’ குறித்தும் ஜோகூர் முதல்வரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு பதில் அளித்த அவர், தடுப்பூசி பணி நிறைவடைந்ததும் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பிற நாட்டு பயணிகளை, குறிப்பாக சிங்கப்பூர் பயணிகளாயி வரவேற்க ஜோகூர் தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram