“விரைவில் மலேசிய எல்லைகள் திறக்கப்படலாம்” – அமைச்சர் நான்சி ஷுக்ரி.!

Tourism Malaysia Border
Image Tweeted by Nancy Shukri

தடுப்பூசி போடும்பணி உலக அளவில் தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாவிற்காக விரைவில் எல்லைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நான்சி தெரிவித்துள்ளார். (Tourism Malaysia Border)

கொரோனா தாக்கத்தால் மலேசியாவில் சுமார் 100 பில்லியன் வெள்ளி அளவிற்கு சுற்றுலாத்துறை நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. (Tourism Malaysia Border)

சிலாங்கூர் : “தடுப்பூசி மையங்களாக மாறும் தனியார் மருத்துவமனைகள்”

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சரான நான்சி சுக்ரி தெரிவித்தார்.

மலேசியாவில் தற்போது 35 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் சுற்றுலாத்துறையில் வேலைசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதில் பாதிபேர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியானது.

இந்த தகவலை மலேசியவின் தேசிய சுற்றுலா மன்றத்தின் முன்னாள் உதவித் தலைவர் எரிக் ஆர். சின்னையா ஒரு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

தங்கும் விடுதிகள், போக்குவரத்து, உணவு போன்ற பல விஷயங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த அளவிற்கு நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி இதுவரை சுற்றுலாத் துறையை சேர்ந்த சுமார் 20 விழுக்காடு பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக சின்னையா தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்டு மலேசிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் விரைவில் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெரும் என்று அமைச்சர் நான்சி தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளிடம் தற்போது போதுமான அளவு தடுப்பூசி கிடைத்து வருவதால் நிச்சயம் நாடுகளின் எல்லைகள் விரைவில் சுற்றுலாவிற்காக திறக்கப்படும் என்றார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram