“கைக்குழந்தைகளுக்கும் இது பொருந்தும்” – மலேசிய ஏர்லைன்ஸ் விதித்த புதிய கட்டுப்பாடு..?

malaysia
Image tweeted by Malaysia Airlines

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கில் முடங்கியுள்ளது. மலேசியாவிலும் தற்போது மீட்சிக்கான பொது நடமாட்டக் கட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்த பொது நடமாடக்க கட்டுப்பாடு வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அண்மையில் மலேசிய பிரதமர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியாவில் கொரோனாவின் பரவல் தற்போது தணிந்து வரும் நிலையில் 1,50,000-க்கும் அதிகமான அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையை கொண்ட நாடுகளில் இருந்து பயணிகள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “கோலாலம்பூர் முதல் தமிழகம் வரை” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட விமான விபரம்..!

இந்நிலையில் மலேஷியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தங்கள் ஏர்லைன்ஸில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

கைக்குழந்தைகளும் இதில் அடக்கம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக தமிழ் மலர் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகள் யாரும் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற நாடுகளை போல மலேசியாவிலும் தற்போது உள்நாட்டு விமான சேவை தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரத்தை கருதிக்கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் புதிய தொற்று தோன்றுவது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram