“கோலாலம்பூர் முதல் தமிழகம் வரை” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட விமான விபரம்..!

Vanthe Bharath
Image tweeted by air India Express

உலகில் உள்ள பிற நாடுகளில் உள்ள மக்களை தாயகம் கொண்டுவந்து கொண்டிருக்கிறது மலேசிய அரசு. அவ்வாறு வருபவர்களை 14 நாட்கள் கட்டாய தனிப்படுத்துதலுக்கும் உள்ளாக்குகிறது மலேசிய அரசு.

வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மக்கள் அரசு தெரிவிக்கும் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலில் மக்கள் இருக்க வேண்டும் என்று அண்மையில் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அது போல அண்டை நாடான இந்தியாவும் பிற நாடுகளில் உள்ள தங்களுடைய மக்களை தாயகம் அழைத்து செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “இந்தியர்கள் மலேசியாவில் நுழைய தடை.?” – அதிரடி சட்டத்தை விதித்த மலேசிய அரசு..!

ஏற்கனவே 5000-க்கும் அதிகமான மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மக்களை அழைத்து சென்றுவருகிறது இந்திய அரசு.

இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த மாதம் செயல்பட உள்ள விமானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவுகளும் தொடங்கிவிட்டது.

ஆனால் இந்த மாதம் தொடங்கி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இந்த மாதத்திற்கான கோலாலம்பூரில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களில் பட்டியலை மலேசியாவில் இருக்கு இந்திய உயர் கமிஷன் வெளியிடவில்லை.

ஆனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதம் கோலாலம்பூரில் இருந்து சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு 8 விமானங்களை ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram