“சர்வதேச விமான பயணம்” – ஜனவரி 31 – 2021 வரை தடை நீட்டிப்பு.?

International Flights
Image tweeted by Indian High Commission in India

அண்டை நாடான இந்தியா ஜனவரி 31ம் தேதி 2021 வரை தன்னுடைய பன்னாட்டு விமான சேவைக்கு தடை விதித்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. (International Flights)

ஏற்கனவே அந்நாடு விதித்த தடை கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜனவரி இறுதி வரை தடையை நீடிப்பதாக போக்குவரத்துக்கு அமைச்சகம் அறிவித்துள்ளது. (International Flights)

“கோலாலம்பூர் முதல் தமிழகம் வரை” – ஜனவரி 2021 விமான பட்டியல் வெளியீடு.!

உலக அளவில் கொரோனா பரவல் தொடங்கி ஊர் ஆண்டை கடந்து விட்ட நிலையில் இன்றளவும் ஆசிய நாடுகளில் கொரோனா அச்சம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இந்த தொற்று பரவ தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த டிஜிட்டல் உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் பொதுமுடக்கத்தை உலகத்தின் 95 சதவிகித நாடுகள் கடைப்பிடத்தை மறக்க முடியாது.

தற்போது லண்டனில் புதிய வகை கொரோனா ஒன்று பரவி வருவதாக அறிவித்த நிலையில் பல நாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் முடக்கி வருகின்றது.

அண்டை நாடான இந்தியாவும் “வந்தே பாரத்” என்ற மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தாலும் பன்னாட்டு விமான சேவைகளை கடந்த மார்ச் முதல் தடை செய்தது.

இந்நிலையில் மீண்டும் தங்களுடைய பன்னாட்டு விமான போக்குவரத்தை இந்த ஜனவரி 31ம் தேதி 2021 வரை தடை செய்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram