“தீப ஒளித்திருநாள்” – வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்.!

Happy Deepavali
Image tweeted by Ismail Sabri

இந்தியா மட்டும் இல்லாமல் உலக அளவில் இந்தியர்கள் மற்றும் தமிழர்களால் கொண்டாடப்படும் விழாக்களில் (Happy Deepavali) மிக முக்கியமானது தீபாவளி திருநாள்.

நமது மலேசியாவிலும் இந்த தீப ஒளித்திருநாள் இன்று ஜாதி மத பாகுபாடு இன்றி கொண்டாடப்பட்டு வருகின்றது. (Happy Deepavali)

“வந்தே பாரத்தின் 100வது சேவை”

அரசியல் தலைவர்கள் பலரும் மலேசிய மக்களுக்கு தங்களுடைய தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“சபாவிற்கு உடனடி உதவி வேண்டும், அடுத்த ஆண்டு அல்ல”

இந்நிலையில் கொரோனா தொற்று மலேசியாவின் பல இடங்களில் அதிகரித்து வருவதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட அண்மையில் புதிய SOP-க்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் அண்மையில் தெரிவித்தார். மேலும் அவர் தனது ட்விட்டர் தளத்தில் தமிழில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வாரம் வெளியான இந்த SOP-யின் அடிப்படையில் இயக்கக்கட்டுப்பாடு அமலில் உள்ள பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டங்களில்போது 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறிய வீடு அல்லது இடமாக இருப்பின் 10 பேர் மட்டுமே அங்கு கூட வேண்டும் என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொது நடமாட்டக்கட்டுப்பாடு அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்கக்கட்டுப்பாடு உள்ள பகுதியில் வாகனங்களில் செல்ல ஏற்கனவே உள்ள கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்திருக்கும் இருக்கும் SOP-க்களை பின்பற்றி, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram