“கோலாலம்பூர் முதல் சென்னை வரை” – வந்தே பாரத்தின் 100வது சேவை.!

Vande Bharath Malaysia
Image tweeted by High Commission of Indian, Kuala Lampur

அண்டை நாடான இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுவது தான் (Vande Bharath Malaysia) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

இந்த கொரோனா காலகட்டத்தில் பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. (Vande Bharath Malaysia)

“உச்சம் தொடும் உள்ளூர் பழங்களின் விலை”

இன்றுவரை பல லட்சம் மக்கள் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் Air India Express நிறுவனம் கோலாலம்பூர் செல்லும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டது.

அந்த நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது “புறப்படும்-சேருமிடங்களுக்கு” இடையில் சேவை வழங்கும் “Point To Point” வகை சேவை அளித்துவரும் நிறுவனமாகும். சேருமிடத்திலிருந்து இணைப்பு விமானசேவைக்கு இது பொறுப்பாகாது என்று அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக மலேசியாவில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு செயல்பட்டு வரும் இந்த சேவை இன்று தனது 100வது விமான சேவையை அளிக்க உள்ளது.

இந்த 100வது சேவையில் மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வரவுள்ளனர்.

இன்று (நவம்பர் 13ம் தேதி) மாலை 6.15 மணியளவில் (மலேசிய நேரப்படி) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட உள்ளது.

வந்தே பாரத் சேவை தற்போது மார்ச் மாதம் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான விமான விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram