“பி.கே.பி : 6 இந்தியர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலார்கள் தற்கொலை.!”

Foreign Embassy
Image Courtesy The Indian Express

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை சுமார் 40-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். (Foreign Workers Suicide)

6 இந்தியர்கள் உள்பட மலேசியாவிற்கு அதிக அளவில் மனிதவளத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களே அதிகம் இறந்துள்ளனர் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. (Foreign Workers Suicide)

30-க்கும் மேற்பட்ட விருதுகள் – அசத்தும் தமிழ் பள்ளி மாணவர்கள்.!

அதிலும் குறிப்பாக கொங்சி எனப்படும் தொகுப்பு வீடுகளில் வாழ்ந்து வந்த தொழிலாளர்களே அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மலேசியாவில் கொரோனா என்ற அரக்கனால் கடந்த மார்ச் 18ம் தேதி 2020ல் பொதுநடமாட்டக்கப்படு அமலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுப்பாட்டால் பல சிறு குறு வணிகர்கள், அவர்களை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

இதனால் இந்த பி.கே.பி காலகட்டத்தில் 40க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் நிதி மற்றும் குடும்ப பிரச்சனைகளால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மியான்மர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிக அளவில் இந்த தற்கொலையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைநகர் கோலாலம்பூரில் தான் அதிக அளவிலான தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது போலீசார் அந்த வழக்குகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram