“3 நாட்களாக 1000ஐ கடக்கும் தொற்று” – பீதியில் மலேசிய மக்கள்.!

Covid 19 Malaysia
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கடந்த மூன்று நாட்களாக கொரோனாவால் (Covid 19 Malaysia) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது 1000ஐ கடந்து வருவது மலேசிய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இந்தியாவில் இருந்து மலேசியா சென்ற இருவர் உள்பட வெளிநாடுகளில் இருந்து மலேசியா வந்த 9 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. (Covid 19 Malaysia)

“இனி ஹோட்டலில் இருந்து வேலைப்பார்களாம்”

மேலும் உள்ளுரில் 1000 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து பல நாட்களாக சபா பகுதியில் தான் அதிக அளவில் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே சமயம் நேற்று மலேசியாவில் கொரோனா காரணமாக 6 பேர் உயிரிழந்திருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனா காரணமாக மலேசியாவில் 277 பேர் மரணித்துள்ளனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்தாலும், ஆறுதல் தரும் செய்தியாக தினமும் 800-க்கும் அதிகமான மக்கள் தொற்றில் இருந்து மீண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் 839 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மலேசியாவில் 25654 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மலேசியாவில் கொரோனா பாதித்த மக்களின் எண்ணிக்கை 36434 ஆகும். மக்கள் ஒத்துழைத்தாள் நிச்சயம் கொரோனாவில் இருந்து மலேசியா விரைவில் மீண்டு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் கவனத்துடன் செயல்பாடு பலர் அரசு நிறுவனங்களும் அறிவுறுத்தி வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram