ஏப்ரல் 19 முதல் அடுத்தகட்ட தடுப்பூசி போடும்பணி தொடக்கம்? – அமைச்சர் ஜமாலுதீன்.!

Phase 2 Vaccine
Image tweeted Madi Azmadi

மலேசியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி விரைந்து நடந்து வருகின்றது. சில இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்புசி பணியும் முடிவடைந்துள்ளது. (Phase 2 Vaccine)

மேலும் இரண்டு கட்ட தடுப்பூசி பெற்றவர்கள் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கோள் அவர்களுக்கு சிறப்பு சலுகை குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. (Phase 2 Vaccine)

‘HSR ப்ராஜெக்ட்” – சிங்கப்பூருக்கு இழப்பீடு கொடுத்த மலேசியா.!

இந்நிலையில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் மலேசியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணியும் தொடங்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை மலேசியாவில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அறிவியல் அமைச்சர் திரு. கஹேரி ஜமாலுதீன் கடந்த மார்ச் 25ம் தேதி சிலாங்கூர் பகுதிக்கு சென்று அங்கு தடுப்பூசி பணிகளை பார்வையிட்டார்.

மேலும் சிலாங்கூரில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகளுக்கு தேவையான விஷயங்களை கேட்டறிந்தார்.

மலேசியாவில் மூன்று கட்டங்களில் இந்த கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

பிரதமருக்கு பின் முதலில் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 5 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை, அதிக அளவில் ஆபத்தில் உள்ள 9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

அதன் பிறகு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்டமாக 18 வயது நிரம்பிய 16 மில்லியன் மக்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இந்த தடுப்பூசி வழங்கு பணி நடைபெறும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram