“ஒரே நாளில் 9 பேர் மரணம்” – 400ஐ தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை.!

Corona Deaths Malaysia
Image tweeted by KKMalaysia

தற்போது ஆசிய நாடுகளில் ஓரளவு கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைய தொடங்கி உள்ளது. இந்நிலையில் மலேசியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. (Corona Deaths Malaysia)

தற்போது மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை அமலில் உள்ளது. நேற்று கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஒரு உச்சம் தொட்டுள்ளது. (Corona Deaths Malaysia)

“தற்கொலைக்கு முயற்சிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்” – அரசு விரைந்து உதவ வேண்டும்.!

கடந்த சில வாரங்களாகவே 1000-க்கும் அதிக அளவிலேயே தொற்று எண்னிக்கை பதிவானது. ஆனால் நேற்று ஒரே நாள் 1900-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 1935 பேரில் 823 பேர் தலைநகர் கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் 429 பேர் சபா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1935 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய இரண்டு பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 82246 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 911 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 68084 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டது. இந்நிலையில் கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்துள்ளது.

மேலும் மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடிப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

நேற்று மட்டும் மலேசியாவில் 9 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 411 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram