“தற்கொலைக்கு முயற்சிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்” – அரசு விரைந்து உதவ வேண்டும்.!

Foreign Embassy
Image Courtesy The Indian Express

மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயற்சிக்கும் வெளிநாட்டு தொழிலார்களுக்கு ஆலோசனை பெற தூதரகம் சிறப்பு எண்களை வழங்கவேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது. (Foreign Embassy)

மேலும் அவ்வாறு மனஅழுத்தத்திற்கு ஆளாகாமல் அவர்களை தடுக்க மலேசிய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. (Foreign Embassy)

குடிநுழைவு தடுப்புக்காவலில் உள்ள 1200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா.!

மலேசியாவை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை சுமார் 40-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

6 இந்தியர்கள் உள்பட மலேசியாவிற்கு அதிக அளவில் மனிதவளத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களே அதிக அளவில் இறந்துள்ளனர் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

அதிலும் குறிப்பாக கொங்சி எனப்படும் தொகுப்பு வீடுகளில் வாழ்ந்து வந்த தொழிலாளர்களே அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மலேசியாவில் கொரோனா என்ற அரக்கனால் கடந்த மார்ச் 18ம் தேதி 2020ல் பொதுநடமாட்டக்கப்படு அமலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுப்பாட்டால் பல சிறு குறு வணிகர்கள், அவர்களை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

இதனால் இந்த பி.கே.பி காலகட்டத்தில் 40க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் நிதி மற்றும் குடும்ப பிரச்சனைகளால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மியான்மர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிக அளவில் இந்த தற்கொலையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைநகர் கோலாலம்பூரில் தான் அதிக அளவிலான தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (Foreign Embassy)

ஆகவே அரசு இதில் தலையிட்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. முகைதீன் அப்துல் காதீர் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram