அண்டை நாடான இந்தியா உலக அளவில் கொரோனா பரவல் உள்ள நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் சுமார் 70,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்னனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ஸ்பெயின், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 5 மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அங்கு தொற்றின் அளவு சற்றும் குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மலாயாவின் ரப்பர் தோட்டமும் – இந்திய ஊழியர்களும் : வைரலாகும் உன்னத படைப்பு..!
இந்நிலையில் எதிர்வரும் குளிர்காலத்தை நினைவில் கொண்டு மலேஷியா அரசு ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளது.
இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் தொற்றின் அளவு அதிகரித்து வருவதை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் மேற்குறிய மூன்று நாடுகளில் இருந்து யாரும் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Long Term Pass, நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், Malaysia My Second Home Pass, Spousal visa வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் என்று மேற்குறிய யாருக்கும் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
இந்நிலையில் 1.5 லட்சம் பேருக்கு மேல் தொற்று உள்ள நாடுகளில் இருந்து மக்கள் தற்காலிகமாக மலேசியாவில் நுழைய முடியாது என்று மலேசியா தற்போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து மக்கள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
? Telegram