Bargain கிளஸ்டர் : கெடா மற்றும் பினாங் பகுதியில் புதிய தொற்று – 55 பேருக்கு கொரோனா பாசிடிவ்..!

Penang Coronavirus
Picture Courtesy Arab News

கடந்த ஜூலை 13ம் தேதி சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) நோய் தொற்று இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஹோட்டல் உரிமையாளராக கருதப்படும் அவர் தனிமைப்படுத்துதல் காலத்தில் தடையை மீறி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் கெடா பகுதியில் அவர் மூலமாக சுமார் 30-க்கும் அதிகமானோருக்கு தொற்று பரவியது.

இதையும் படிங்க : வந்தே பாரத் : 4 நாட்கள் கழித்து மீண்டும் தொடங்கிய சேவை – திருச்சி வந்திறங்கிய பயணிகள்..!

மேலும் கெடா பகுதியில் தொற்று தொடர்ந்து அதிகரித்த நிலையில் அம்மாநில முதல்வர் முஹமது சனுசி முஹமது நூர் வெளியிட்ட அறிக்கையில் பொதுப்பூங்காக்கள் மூடப்படும் என்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாகவும் அறிவித்தார். உணவகங்களில் உணவருந்த தடை, இரவு மார்க்கெட்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இயங்க தடை என்று மீண்டும் அங்கு கட்டுப்பாட்டை பாலப்படுத்துவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த சிவகங்கை விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில் கெடா பகுதியில் தற்போது புதிய கிளஸ்ட்டர் உருவாகி உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘Bargain’ என்று அழைக்கப்படும் இந்த கிளஸ்டருக்கு கெடா பகுதியில் 1173 பேருக்கு சோதனை நடப்பட்டது என்று அதில் 44 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பினாங் பகுதியிலும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms