வந்தே பாரத் : 4 நாட்கள் கழித்து மீண்டும் தொடங்கிய சேவை – திருச்சி வந்திறங்கிய பயணிகள்..!

KL to Trichy Fllight
Image tweeted by India in Malaysia

கோவிட் 19 தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் தங்களுடைய பன்னாட்டு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஆயினும் கடந்த மார்ச் மாதம் வரை சொந்த நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக சென்று சிக்கியுள்ள மக்களை மீட்க எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலங்கை, வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் வலுபெற்றே வருகிறது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி தாயகம் அழைத்து வருகின்றது இந்திய அரசு. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசிய அரசின் உதவியுடன் அங்குள்ள இந்திய மக்களை இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு அழைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 13ம் தேதிக்கு பிறகு மீண்டும் தற்போது மலேசியா முதல் இந்தியா வரையிலான விமான சேவை தொடங்கியுள்ளது. நேற்று கோலாலம்பூரில் இருந்து 169 பயணிகளுடன் திருச்சி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம். இந்த விமானத்தில் தஞ்சையை சேர்ந்த இளவரசி பிரபு என்பவர் தனது மகனுடன் பயணித்தார். வெகுநாட்களாக சிக்கியிருந்த அவர்களை தாயகம் திரும்ப உதவிய தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் குறிப்பாக மலேசிய அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms