“அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்யலாம்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

Authorized Travel Agents
Image tweeted by Air India Express

அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே பயணிகள் தங்களுடைய டிக்கெட்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. (Authorized Travel Agents)

குறிப்பாக மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். (Authorized Travel Agents)

“உள்நாட்டு பயணங்களை ஆதரிப்போம்” – சலுகையை அறிவிக்கும் மலேசிய ஏர்லைன்ஸ்.?

இந்தியாவை தலைமையகமாக கொண்டுள்ள அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இதை குறிப்பிட்டுள்ளது.

“கோலாலம்பூருக்கான டிக்கெட்டுகளை வலைத்தளம் / நகர அலுவலகங்கள் / கால் சென்டர் மையங்கள் / அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம் என்பதை நினைவில் கொள்க.”

“கோலாலம்பூரிலிருந்து இந்தியாவுக்கான டிக்கெட்டுகளை அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யலாம்.”

இவ்வாறு அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் சேவைகளுக்கு, மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது.(Authorized Travel Agents)

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தவிர, பிற விமான சேவை நிறுவனங்களையும் அதிக அளவில் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வந்தே பாரத் சேவை இந்த ஊரடங்கு காலத்தில் பெருமளவு உதவியாக இருந்தாலும், பிற விமான சேவைகள் இல்லாதது மக்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது.

உலக அளவில் இன்னும் கொரோனா குறையவில்லை என்றாலும் மக்கள் அதனோடு வாழ பழகிவிட்டனர் என்பதே நிதர்சனம்.

விமான சேவைகள் 2022ம் ஆண்டு வரை பல கட்டுப்பாடுகளுடன் தான் இயங்கும் என்றும் பல வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram