“உள்நாட்டு பயணங்களை ஆதரிப்போம்” – சலுகையை அறிவிக்கும் மலேசிய ஏர்லைன்ஸ்.?

Malaysia Airlines offer
Image tweeted by Malaysia Airlines

“உள்நாட்டு பயணங்களை ஆதரிப்போம்”, என்ற வாசகத்திற்கு ஏற்ப தனது கட்டணத்தை குறைக்கும் நோக்கில் மலேசிய ஏர்லைன்ஸ் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (Malaysia Airlines offer)

பரவி வரும் தொற்று காரணமாக பல தொழில்கள் முடக்கமடைந்து வருகின்றது. குறிப்பாக உலகெங்கும் உள்ள விமான சேவை நிறுவனங்கள் பெருமளவு இழப்பை சந்தித்துள்ளது. (Malaysia Airlines offer)

“மலேசியா முதல் திருச்சி மற்றும் டெல்லி வரை” – நாடு திரும்பிய 336 பேர்.!

இந்நிலையில் மறுசீரமைப்பு திட்டத்திற்கு குத்தகைதாரர்கள் இணக்கம் தெரிவிக்காத நிலை தொடர்ந்தால் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்படும்.

இந்த தகவலை அண்மையில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. இஸாம் இஸ்மாயில் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Firefly, MASwings, MASkargo உள்ளிட்ட 19 துணை நிறுவனகளை கொண்டது தான் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம்.

ஏர்லைன்ஸ் தளத்தில் உலக அளவில் புகழ் பெற்ற நிறுவனம் இது என்றால் அது மிகையல்ல.

முன்னறிவிப்பு இன்றி பல முன்னணி விமான நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை நீக்கியது அனைவரும் அறிந்த ஒன்றே.

விமான ஓட்டிகள் உள்பட சில பணியாளர்கள் வேலை இழந்த வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட அவலமும் அண்மையில் அரங்கேறியது.

இந்த சூழலில் “உள்நாட்டு பயணங்களை ஆதரிப்போம்” என்ற அரசின் கூற்றின் அடிப்படையில் தங்களுடைய சேவையில் சலுகைகளை அறிவிக்க ஆயத்தமாக உள்ளது மலேசிய ஏர்லைன்ஸ்.

அந்த நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரான லௌ யின் மே பேசுகையில், கொரோனா தடுப்பு முயற்சியாலும், அனைவரின் கூட்டு முயற்சியாலும் உள்நாட்டு விமான சேவை விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என்றார் அவர். (Malaysia Airlines offer)

மேலும் தங்களுடைய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வணிக மற்றும் பொருளாதார வகுப்புகளில் 200 ரிங்கிட் அளவு வரை தள்ளுபடி கோரலாம் என்று அவர் கூறினார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram