“மைசெஜாத்தெரா செயலி” – கொரோனா தடுப்பூசி பெற பதிவு செய்யலாம்.!

App for Vaccine
Twitter Image

“மைசெஜாத்தெரா” MySejahtera என்ற செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. (App for Vaccine)

மேற்குறிப்பிட்ட அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் பிறகு மக்கள் தங்களுடைய தகவல்களை அதில் பதிவிட வேண்டும். (App for Vaccine)

தமிழ்நாடு – கோலாலம்பூர் : மார்ச் மாத புக்கிங் தொடங்கியது – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

அண்ட்ராய்டு மற்றும் ios ஆகிய தரவுகளில் இந்த செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜெர்மன் ஆகிய இரு நாடுகளில் இருந்து முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 21ம் தேதி மலேசியாவிற்கு கொரோனா தடுப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியாவில் மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று மலேசிய பிரதமர் முஹிதீன் யாசின் அண்மையில் தெரிவித்தார்.

ஜெர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்களான Pfizer மற்றும் BioNTech ஆகிய நிறுவங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்தினை மலேசியா பெற்றுவருகின்றது.

இந்த மருந்துகளை நாளை அந்த நாடுகளிடம் இருந்து பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

பிரபல இந்திய செய்தி நிறுவனமான NDTV அண்மையில் வெளியிட்ட செய்தி குறிப்பில் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா தடுப்பூசி முதலில் தன் மீது பரிசோதனை செய்யப்படும் என்று மலேசிய பிரதமர் யாசின் அவர்கள் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மலேசியாவில் மூன்று கட்டங்களில் இந்த கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பிரதமருக்கு பின் முதலில் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 5 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram