தமிழ்நாடு – கோலாலம்பூர் : மார்ச் மாத புக்கிங் தொடங்கியது – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

Vande Bharath March
Image Tweeted Air India Express

தமிழகத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான மார்ச் மாத பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. (Vande Bharath March)

தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து பல விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளது. (Vande Bharath March)

“ஆர்.டி.எஸ் ரயில் திட்டத்தால் மலேசிய பொருளாதாரம் உயரும்” – ஜோகூர் சுல்தான்.!

இந்த விமானங்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த விமானங்களில் பயணம்செய்ய முன்பதிவு தொடங்கி உள்ளது.

மார்ச் 1ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இயக்கப்பட உள்ளது.

மார்ச் 1 முதல் அனைத்து திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.45 மணிக்கு திருச்சியில் இருந்து விமானங்கள் கோலாலம்பூர் புறப்படும்.

மேலும் மார்ச் 1ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து மார்ச் 1 முதல் 25 வரை அனைத்து வியாழக்கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கோலாலம்பூர் செல்லும்.

இதற்கான பட்டியல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை வந்தே பாரத் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram