“கொரோனா தடுப்பூசியால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால்.?” – அரசின் புதிய அறிக்கை.!

Vaccination Second Dose
Image Tweeted by BERNAMA

கொரோனா தடுப்பூசியால் பயனாளர்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு அரசு சிறப்பு நிதி உதவி வழங்கவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. (Adverse Effects of Vaccine)

இதுகுறித்து ஒரு முழுநீள அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். (Adverse Effects of Vaccine)

“4 லட்சம் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி” – விரைவில் தொடங்கும் Second Phase.!

அந்த அறிவிப்பில் “COVID-19 தடுப்பூசியினால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் சிறப்பு நிதி உதவி வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது”.

தடுப்பூசி பெறுபவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டு நீண்டகால மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு RM 50,000 வழங்கப்படும்.

அதேபோல COVID-19 தடுப்பூசி காரணமாக நிரந்தர இயலாமை அல்லது இறப்பு ஏற்பட்டால் RM 500,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் கீழ் இந்த நிகழ்விற்காக சுமார் RM 10 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக அரசு மூன்று குழுக்கள் அடங்கிய ஒரு கமிட்டியை உருவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பாபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் டோஸ் மருந்தும் அளிக்க தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொரோனாவின் தாக்கம் மலேசியாவில் அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது அதனுடைய அளவு சற்று குறைந்துள்ளது.

மேலும் தடுப்பூசி பயன்பாட்டால் விரைவில் எல்லைகள் திறக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram