“தொடர்ந்து உயரும் உள்ளூர் தொற்று” – மலேசியா திரும்பிய 8 இந்தியர்களுக்கு உறுதியான Covid 19..!

Sivagangai Indian
Picture courtesy malaysia mail

உலக அளவில் பல நாடுகளில் குறிப்பாக அண்டை நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவின் வேகம் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

உலக அளவில் கொரோனா பரவளில் அமெரிக்கா தொடர்ந்து முதிலிடம் வகிக்க, இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் குளிர்காலத்தை நினைவில் கொண்டு மலேசிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அதிரடி சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தது.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தோனேஷியா உள்ளிட்ட 23 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு முற்றிலுமாக தடையை விதித்து ஆணையிட்டது.

இதையும் படிங்க : மிஷன் வந்தே பாரத் – “கோலாலம்பூரில் இருந்து திருச்சி மற்றும் டெல்லி திரும்பிய இந்தியர்கள்”..!

ஆனால், இந்த தடை குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து மலேசிய அரசும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தங்களது தரப்பில் தெரிவித்தது. அதனை தொடர்ந்து சில தளர்வுகளையும் மலேஷியா அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட சில விசாக்களுக்கு அனுமதி அளித்த நிலையில் பிற நாடுகளில் இருந்து மக்கள் மலேசிய திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மலேசியா திரும்பிய 12 வெளிநாட்டவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. அதில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

40 பேருக்கு உள்ளூரில் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மலேசியாவில் பாதிப்பு எண்ணிக்கை 10219ஆக உள்ளது. மேலும் 9355 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதுவறை மலேசியாவில் இந்த நோய் காரணமாக 130 பேர் பலியாகி உள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram

 

Related posts

COVID – 19 : ‘புக்கிட் ஜலீல் குடிநுழைவு மய்யம்..!!’ – ‘ஒரே நாளில் 155 வெளிநாட்டவருக்கு நோய் தொற்று..?’

Web Desk

Sabah : மலேசியாவில் அனல் பறக்கும் சபா மாநில தேர்தல் களம்! தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எப்போது..?

Editor

கொரோனா குறித்து பரவும் வதந்தி – மலேசியாவில் ஒருவர் கைது  

Web Desk