“சபாவில் அதிகரிக்கும் தொற்று” – களமிறங்கிய 475 சுகாதார ஊழியர்கள் – சுகாதார அமைச்சகம்.!

MOH Sabah
Image Tweeted by KKMalaysia

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி தற்போது மலேசியாவும் பல உயிர்களை பலிகொடுத்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் இருவர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.

குறிப்பாக Sabah பகுதியில் தான் தொற்றின் அளவும் இறப்பின் விகிதமும் அதிகமாக உள்ளது. இதுவரை மலேசியா கொரோனாவிற்கு 157 பேரை பலிகொடுத்த்துள்ளது.

ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொடிய நோயில் இருந்து மெல்ல மெல்ல மலேஷியா மீண்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தொற்றின் வேகம் என்பது அதிகரித்துள்ளது.

நேற்றைய பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 553 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய 7 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “2021 தைப்பூசத்திருவிழா” : மிதமான கொண்டாட்டங்களுடன் நடைபெற வேண்டும் – சுப்பிரமணியம்.!

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 15657 என்ற அளவை தொட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 133 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 10913 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தற்போது தொற்று காணப்படுகிறது.

இந்நிலையால் சபா பகுதியில் நிலவும் அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையில் MOH (சுகாதார அமைச்சகம்) சார்பில் 475 பணியாளர்கள் நேற்று சபா பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆய்வுகூடம் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்ற இருக்கின்றனர் என்று மலேசிய மருத்துவ அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிதித்துள்ளது.

தொற்றின் அளவு நேற்று 500ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தொடராமல் இந்த நோயின் சங்கிலியை உடைக்க மக்கள் அரசோடு இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று பல தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram