“2021 தைப்பூசத்திருவிழா” : மிதமான கொண்டாட்டங்களுடன் நடைபெற வேண்டும் – சுப்பிரமணியம்.!

thaipusam

உலகம் முழுக்க உள்ள ஹிந்து மக்களால் வெகு விமர்சயாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வுதான் தைப்பூசம். மலேசியாவிலும் இந்த திருவிழா ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த தைப்பூசத் திருவிழா தடைபெற வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த இக்கட்டான சூழலிலும் அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலரின் முயற்சியால் இந்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இந்த தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதாரத்திற்கு அவசரநிலையை அப்போது பிரகடனம் செய்தது உலக சுகாதார மையம். திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என்று அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் மிகவும் கவனத்துடன் செய்யலப்பட அறிவுறுத்தியது.

இதையும் படிங்க“சபா பகுதியில் ஒரே நாளில் 274 பேருக்கு பரவிய தொற்று – 6 பேர் உயிரிழப்பு”

இருப்பினும் வெகு விமர்சையாக வழக்கமான உற்சாகத்துடன் தைப்பூசத்திருவிழா கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி பொது நடமாட்டக்கட்டுப்பாடு மலேசியாவில் விதிக்கப்பட்டது,.

தற்போது மிக குறைந்த அளவில் இருந்து வந்த தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மலேசியா கொரோனாவின் மூன்றாம் அலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது வரவிருக்கும் 2021ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா ஜனவரி மாதம் இறுதியில் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழா மிகவும் மிதமாகக் கொண்டாட்டங்களுடன் நடைபெற வேண்டும் என்று மலேசியாவின் மருத்துவசங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தொற்றின் அளவு அதிகரித்திருப்பதால் இது கட்டாயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram