“2021-ல் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது” – நூர் ஹிஷாம் அப்துல்லா

Malaysia Covid 19 2021
Image Tweeted by Noor Hisham Abdullah

இந்த 2021ம் ஆண்டில் மலேசியாவில் கொரோனவால் மரணிப்போரின் அளவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் தெரிவித்துள்ளார். (Malaysia Covid 19 2021)

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “இந்த புதிய 2021ம் ஆண்டின் தொடக்கம் முதல், கோவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.” (Malaysia Covid 19 2021)

திருச்சி – கோலாலம்பூர் : நாளை புறப்படும் முதல் சிறப்பு விமானம்.!

“மேலும் கடந்த 9 ஜனவரி 2021 நிலவரப்படி, இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 71 வழக்குகளாக அதிகரித்துள்ளது.”

“கோவிட் -19 மூலம் இறந்தவர்களின் உடலை அகற்றுவது எளிதானது அல்ல. நல்லடக்கம் செய்யும் அதிகாரிகள் இறுதி சடங்கு முடியும் வரை கடுமையான வெப்பம் நிறைந்த ஆடை அணிய வேண்டும்”

இவ்வாறு நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கடந்த நாட்களாக தொற்றின் அளவு 2000ஐ கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் ஆசிய நாடுகளில் ஓரளவு கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. இருப்பினும் மலேசியாவில் கொரோனா தொற்று சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

தற்போது மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை அமலில் உள்ளது. மேலும் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஒரு உச்சம் தொட்டுள்ளது.

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 2426 பேரில் 730 பேர் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் 321 பேர் ஜோஹோர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram