“மலேசியாவில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு புதிய SOP” – இஸ்மாயில் சபரி யாக்கோப்.!

PKPP in Perak
Picture Courtesy Astro Awani

உலக அளவில் இந்தியர்கள் மற்றும் தமிழர்களால் கொண்டாடப்படும் விழாக்களில் (Deepavali) தீபாவளி திருநாளும் ஒன்று. மலேசியாவிலும் தீப ஒளித்திருநாள் வருகின்ற நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று மலேசியாவின் சில இடங்களில் அதிகரித்து வருவதால் (Deepavali) தீபாவளி பண்டிகையை கொண்டாட புதிய SOP-க்கள் விரைவில் வெளியிடப்படும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : “நன்கொடைகளை மட்டுமே நம்பியிருத்தல் கூடாது” – மலேசிய மருத்துவ அமைச்சகம்.!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தேசியப் பாதுகாப்பு மன்றக்கூட்டத்தில் தீபாவளி பண்டிகை குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த SOP வெளியாகும் என்று தெரிவித்தார்.

கோலாலம்பூர் பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொது நடமாட்டக்கட்டுப்பாடு வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி சந்தைகள் மற்றும் அதற்கான அனுமதி குறித்த விஷயங்கள் முற்றிலும் விவாதிக்கப்பட்டு அதன் பிறகு முறையான செயல்பாட்டு நெறிமுறைகள் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த SOP என்பது தீபாவளியை முன்னிட்டு எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்பதையும்.

எதற்கு அனுமதி உண்டு, எதற்கு அனுமதி இல்லை என்பதையும் உள்ளடக்கியதாகவும். மக்கள் வெளியாகும் SOP-க்களை கவனமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram