“நன்கொடைகளை மட்டுமே நம்பியிருத்தல் கூடாது” – மலேசிய மருத்துவ அமைச்சகம்.!

Ministry of Health
Image tweeted by Ministry of Health

மலேசியா முழுமைக்கும் இல்லாமல் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் தொற்றின் அளவை சமாளிக்க அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று (Ministry of Health) மருத்துவ அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் டத்தோ சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் (Ministry of Health) அவர் வெளியிட்ட அறிக்கையில் அரசு வெறும் நன்கொடைகளை மட்டுமே நம்பியிருத்தல் கூடாது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : “புதிய உச்சத்தில் கொரோனா தொற்று” – Sabah பகுதியில் 702 பேர் பாதிப்பு..!

கடந்த்த அக்டோபர் 17ம் தேதி மேதன் மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் RMAF A400M போக்குவரத்து விமானத்தைப் பயன்படுத்தி தவாவுக்கு அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சபாவில் சுகாதார வசதிகளைப் பயன்படுத்துவதற்காக MOH மற்றும் மெர்சி மலேசியாவிலிருந்து மருத்துவ உபகரணங்களையும் இந்த விமானம் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சபா பகுதிக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களும் டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

சபா பகுதியில் தொற்றின் அளவை குறைக்க மக்கள் தான் முழு ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அதிக அளவில் இறப்பும் சபா பகுதியில் பதிவாகி வருவது வருத்தமளிக்கிறது. மருத்தவ உபகரணங்களை அரசு தாமதமின்றி வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram