நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா..? – “உங்கள் உதவி எங்களுக்கு தேவை” – மலேசிய அரசு.!

Malaysia Covid 19
Image tweeted by Noor Hisham Abdullah

பரவி வரும் இந்த நோய்க்கு தற்போது எதிர் மருந்தாக ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த மக்களின் பிளாஸ்மாவை பயன்படுத்தி உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கலாம் என்று கண்டறிந்தது சீனா.

இதன் அடிப்படையில் சில நாடுகளில் இந்த பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் இது முழுமையான தீர்வு அல்ல என்பது பல விஞ்ஞானிகளின் கருத்து.

கொரோனாவிற்கு, தற்போது சுமார் 9 தடுப்பூசிகள் தயாராகி வருவதாகவும் அந்த மருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புகள் உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு உலக சுகாதார மையத்தின் தலைவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “சபா பகுதியில் தொடர் உச்சத்தில் தொற்று” – அமைச்சர் வெளியிட்ட 16 முக்கிய கட்டுப்பாடுகள்..!

ரஷ்யா போன்ற நாடுகளும் தற்போது எதிர்மருந்துகளை மக்களுக்கு சோதனை முறையில் அளித்து வருகின்றது.

அதே போல தற்போது மலேசியாவும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனெரல் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில் “COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு.

“COVID-19 நோயாளிகளிடையே ஆன்டிபாடி எதிர்வினைகளை நடுநிலையாக்குவது குறித்த ஆய்வில் மருத்துவ ஆராய்ச்சியில் பங்கேற்க COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை MOH இல் உள்ள IMR இன் ஆராய்ச்சியாளர்கள் குழு அழைக்கின்றது.” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்த இந்த ஆய்வுக்கு உதவிட அவர் அழைப்புவிடுத்துள்ளார். தடுப்பு மருந்து வரும் வரை காத்திருக்காமல் இதுபோன்ற துரித முடிவுகளை பல நாடுகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram