“சபா பகுதியில் தொடர் உச்சத்தில் தொற்று” – அமைச்சர் வெளியிட்ட 16 முக்கிய கட்டுப்பாடுகள்..!

Ismail Sabri Yaakob
Image tweeted by Ismail Sabri Yaakob

கடந்த ஒரு வார காலமாக மலேசியாவில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் மலேசியா திரும்பிய ஒரு வெளிநாட்டவர் உள்பட 563 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதே சமயம் தொடர்ந்து தொற்றின் அளவில் சபா முன்னிலையில் உள்ளது.

நேற்று சபா பகுதியில் 291 பேருக்கு தொற்று பரவி உள்ளது.

இந்நிலையில் மூத்த அமைச்சர் இஸ்மாயில் வெளியிட்ட முகநூல் பதிவில் சபா பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் “மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும், மாவட்டத்தைக் கடக்க வேண்டிய ஊழியர்களுக்கு, அவர்கள் பணி பாஸ் அல்லது அலுவலகத்திடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று அதை பயன்படுத்த வேண்டும்”.

இதையும் படிங்க : “சபாவில் அதிகரிக்கும் தொற்று” – களமிறங்கிய 475 சுகாதார ஊழியர்கள் – சுகாதார அமைச்சகம்.!

“ஒரு வீட்டிலிருந்து 2 பேர் மட்டுமே தேவைகளை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.”

“அனைத்து பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்கள், திறன் பயிற்சி நிறுவனங்கள், மழலையர் பள்ளி, நர்சரிகள், தஃபிஸ் மையங்கள், பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன.”

“மசூதிகள் மற்றும் பிற இஸலாமியர் அல்லாத வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன.” திருமணங்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு, சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.”

மேற்குறியது உள்பட பல கட்டுப்பாடுகளை சபா பகுதியில் விதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ச்சியாக பல தொற்றுக்களை கண்டு வந்த கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது .

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram