“போதைப்பொருள் விவகாரம்” – மலேசியாவில், இரண்டு இந்தியர்கள் உள்பட மூவர் கைது..!

Sugar Book Malaysia
Picture Courtesy WAAY Tv

மலேசியாவில் போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாட்டின் வளர்ச்சியை பெரிது பாதிக்கும் பல விஷயங்களில் இந்த போதை பொருளும் நடமாட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செபெராங் பிறை ஜெயா பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஒரு வாலிபர் வீட்டை சோதனை செய்ததில் சுமார் 20,000 வெள்ளி மதிப்புள்ள கெத்தாமின் எனப்படும் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “மலேசியா திரும்பிய மூவருக்கு தொற்று” – நாளை முதல் அமலுக்கு வரும் புதிய தடை..!

இந்த போதை பொருள் கடத்தல் விவகாரமாக 2 இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர்களுடன் சேர்த்து 19வயது மதிக்கத்தக்க ஒரு தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

31வயது நிரம்பிய இந்திய ஆடவர் மற்றும் அந்த பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 236 கிராம் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதாக அந்த நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் விவகாரத்தில் இந்தியர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மலேசியாவில் இந்து போன்ற சில கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. போலீசார் இதனை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரிடமும் முழுவீச்சில் விசாரணை நடந்து வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram