“மலேசியா திரும்பிய மூவருக்கு தொற்று” – நாளை முதல் அமலுக்கு வரும் புதிய தடை..!

Malaysia Ban
Picture Courtesy Country Flags

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று 6 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 9397 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : “இந்த இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

மேலும் இன்று மட்டும் 2 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 9115 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 சதவிகிதமாக ஆக உள்ளது.

மேலும் இன்று கொரோனா காரணமாக மலேசியாவில் யாரும் மரணிக்காத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 128ஆக உள்ளது.

இன்று பாதிக்கப்பட்ட 6 பேரில் 3 பேர் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை முதல் மலேசிய விதித்த கட்டுப்பாடு அமலுக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் 1,50,000-க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கொண்ட நாட்டு மக்கள் தற்காலிகமாக மலேசியர்விற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மலேசியாவில் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் அதிக அளவில் தொற்று அதிகமாவதே அரசின் இந்த முடிவுக்கு காரணமாகி கூறப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram