‘நீங்கள் சாம்பியாக மாறிவிடுவீர்கள்’ – மலேசியாவில் பரவிய புது வதந்தி

zombie

கொரோனா நோய் தொற்று இதுவரை சீனாவில் பலரை பலிவாங்கியுள்ளது, சீனா மட்டும் இன்றி பிலிபைன்ஸ் நாட்டிலும் இந்த நோய் தொற்று ஒருவரை பலிவாங்கியுள்ளது. சீனாவை தவிர உலகில் உள்ள 20 நாடுகளில் இந்த நோய் பரவி இருந்தாலும் சீனா மட்டும் பிலிபைன்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் கோரோனாவால் உயிர்பலி இல்லை.

இந்த நோய் பரவாமல் இருக்க எல்லா நாட்டு அரசும் போராடி வரும் நிலையில் மலேசியாவில் இந்த நோய் குறித்து புதிதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. அது தான் இந்த நோய் தாக்கினால் மக்கள் சாம்பியாக மாறிவிடுவார்கள் என்ற வதந்தி.

இவ்வாறு வந்ததிகளை பரபியவர்களை மலேசியா போலிசார் கைது செய்து உள்ள நிலையில், தற்போது மீண்டும் இந்து போன்ற சில வதந்திகள் பரவி வருகின்றது. தற்போது வதந்திகளை பரப்பியதற்காக 49 வயது மதிக்கத்தக்க ஒரு ஆடவரையும் 28 வயதுடைய பெண் ஒருவரையும் மலேசியா போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இது போன்ற வந்ததிகளை பரபர்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் 50,00௦ ரிங்கட் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.