COVID – 19 : மீண்டு வரும் மலேசியா – ஒரே நாளில் 202 பேர் பூரண குணம்

malaysia recovering

மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்களின் அளவு குறைந்துள்ளன மலேசியா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 14ம் தேதி வெளியான அறிக்கையின்படி மலேசியாவில் சுமார் 150 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது கடந்த இரண்டு வாரங்களை ஒப்பிடும்போதும் மிக குறைவான அளவிலான பாதிப்பு என்று கூறினார்.

அதே போல ‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் சுமார் 202 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 2478 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும்,  மகிழ்ச்சி அளிப்பதாகவும் இயக்குனர் ஜெனரல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இதுவரை மலேசியாவில் 82 பேர் இந்த நோயின் காரணமாக இறந்துள்ளதாகவும், அதே சமயம் 33 பேர் செயற்கை சுவாசம் பெரும் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் விதிக்கப்பட்டிருக்கும் இந்த பொது நடமாட்க் கட்டுப்பாட்டை சிறந்த முறையில் கடைபிடிக்கவும் அவர் வலியுறுத்தினார்.