‘உலக அளவில் முகமூடி பற்றாக்குறை..?’ – களமிறங்கும் மலேசிய ‘TOP GLOVE’ நிறுவனம்

top glove

மலேசியாவில் உள்ளது, உலகின் மிகப் பெரிய மருத்துவ கையுறைகளை தயாரிக்கும் “Top Glove Corporation Berhad”, என்ற நிறுவனம். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய தற்போது இந்த நிறுவனம் முகமூடிகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 5 கையுறைகளில் ஒன்று இந்த நிறுவனம் தயாரித்த ஒன்றாக தான் இருக்கும்.

அந்த அளவுக்கு உலக அளவில் அதிக கையுறைகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 110 மில்லியன் முகமூடிகளை தயாரிக்கும் திறன் கொண்டுள்ளதாக இருக்கிறது. மேலும், “இந்த முகமூடிகள் தற்போது எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விரைவில் விற்பனைக்கு கிடைக்கும். நிச்சயம் தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழலில் இது மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று” என்று இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் லிம் வீ சாய் கூறினார்.

மலேசியாவை பொறுத்தவரை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) நிலவரப்படி 4,228 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.