‘தனிமைப்படுத்துதல் காலத்தில் வெளியே சென்ற பெண்’ – விதியை மீறியதால் நீதி மன்றத்தில் இன்று ஆஜர்..!

Pink Band
Image tweeted by Malaysiakini

பிற நாடுகளை போல கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பிற நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களை, தாயகத்திற்கு திரும்ப அழைத்து வருகின்றது மலேசிய அரசு. இந்நிலையில் அவ்வாறு பிற நாடுகளில் இருந்து தாயகம் வருபவர்கள் அரசு நியமித்துள்ள இடங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் அண்மையில் புதிய தளர்வை ஏற்பாடு செய்து அறிவித்தது மலேசிய அரசு.

பிற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அந்த சோதனையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் அரசு முகாம்களில் தனிமைபடுத்தப்படுவர், அதே சமயம் தொற்று இல்லாதவர்கள் வீட்டிற்கு அனுப்படுவர். ஆனால் வீட்டிலும் அவர்கள் தங்களுடைய வீடுகளில் தங்களை தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதையும் படிங்க : Sivagangai Cluster : Nasi Kandar கடை உரிமையாளருக்கு 5 மாதம் சிறை RM12,000 அபராதம்..!

மேலும், நோய் தொற்று இல்லாதவர்கள் மைசெஜாத்திரா பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவேண்டும், அதுமட்டும் இல்லாமல் தனிமைபடுதப்படும் காலம் முழுவதும் அவர்கள் அந்த கைப்பட்டையை (wristband) அணிய வேண்டும் என்றும் இஸ்மாயில் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 17 ம் தேதி அந்த மணிக்கட்டு பட்டையை அணிந்தவாறே பொது இடங்களுக்கு சென்றுள்ளார் ஒரு பெண்மணி.

அந்த பெண்மணி மணிக்கட்டையில் அந்த அடையாளத்தோடு உணவருந்திய புகைப்படம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அந்த பெண்மணி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்விற்கு பிறகு தற்போது மலேசியா அவரும் அனைவரும் அரசு காப்பகத்தில் கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms