‘கோலாலம்பூரில் இருந்து சென்னை வரும் 40 இந்தியர்கள்’ – உதவிக்கரம் நீட்டிய Pekan Nanas தடுப்பு மையம்..!

KL to Chennai
Image tweeted by India in Malaysia

தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக தாயகம் செல்லமுடியாமல் தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் ஏற்கனவே சில விமானங்களில் 500-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை மற்றும் திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய high commission வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (வந்தே பாரத் – 4) (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.

இந்நிலையில் இன்று மலேசியாவில் உள்ள Pekan Nanas தடுப்புக்காவல் நிலையத்தின் உதவியால் சிறப்பு விமானம் மூலம் 40 இந்தியர்கள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வரவுள்ளார். இந்திய மற்றும் மலேசிய அரசின் முயற்சிக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms