COVID – 19 : உலகளவில், பாதிப்பு அடிப்படையில் மலேசியாவிற்கு எந்த இடம்..? – WHO

WHO

கொரோனா பரவலை அடுத்து தற்போது உலக நாடுகள் பல தங்கள் நாடுகளில் அதிக பாதிப்பு உள்ள இடங்களை சிவப்பு மண்டலம் அதாவது பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக அறிவித்து அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் மலேசியாவிலும் இந்த முறை கையாளப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படியில் தற்போது சுமார் 26 இடங்கள் மலேசியாவில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அதாவது சிகப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில், சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் (1,236 பாதிப்புகள்) பதிவாகியுள்ளன. அதே போல லெம்பா பந்தாயிலும் சுமார் 500 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக மலேசியாவில் கொரோனா தாக்கம் குறைத்து வருவதாக கூறப்பட்டாலும் மேலும் இரண்டு வாரங்களுக்கு தற்போது நிலவும் கட்டுப்பட்டு நீட்டிக்கப்பட வேண்டும் என்று மலேசிய மருத்துவ குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று WHO எனப்படும் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் மலேசியா உலகளவில் கொரோனா தாக்கத்தில் 34வது இடத்தில் உள்ளது. இதுவரை மலேசியாவில் கொரோனாவால் சுமார் 4683 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர்.