மலேசியா : ‘பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறோம்’ – பேருந்து செயல்பட்டு நிறுவனங்கள்

putrajaya

இந்த கொரோனா தொற்றின் காரணமாக நாங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளோம், என்று மலேசிய நாட்டின் மிகப்பெரிய பேருந்து செயல்பட்டு நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. புத்ராஜெயாவிடம் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாட்டின்போது MCO விதியின்படி பேருந்துகள் செயல்பட்டாலும் மக்கள் யாரும் தங்கள் பேருந்துகளை பயன்படுத்துவதில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையினால் அடிப்படை வருமானத்தை கூட தாங்கள் இழந்துவிட்டதாகவும், தங்களுடைய பணியாளர்கள், பேருந்திற்காக எரிபொருள், பேருந்தின் பராமரிப்பு போன்ற பல விஷயங்கள் முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது நிலவும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த இக்கட்டான சூழலில் அரசு தங்களுக்கு உதவியளிக்க வேண்டும் என்று பேருந்து செயல்பட்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. உலக முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா காரணமாக பலதரப்பட்ட தொழில்கள் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.