“கெடா பகுதியில் தொற்று” – பள்ளிகள் செயல்படுவது குறித்து விளக்கம் கொடுத்த நூர் ஹிஷாம் அப்துல்லா..!

Noor Hisham Abdullah
Image tweeted by Noor Hisham Abdullah

தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் பல மாத பூட்டுதலுக்கு பின்னர் கடந்த மே மாதம் முதல் மீட்சிக்கான கட்டுப்பாடு நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் மலேசியாவில் பொருளாதார துறைகள் திறக்கப்பட்ட. அத பிறகு சில தினங்களுக்கு முன்பு கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டன. இந்நிலையில் உள்ளூரில் தொற்று முழுவதுமாக நீங்கிய நிலையில் அண்மைக்காலமாக மீண்டும் உள்ளூர் தொற்று தலைதூக்க தொடங்கியது.

இது ஒருபுரம் இருக்க கடந்த ஜூலை 13ம் தேதி சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) நோய் தொற்று இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஹோட்டல் உரிமையாளராக கருதப்படும் அவர் தனிமைப்படுத்துதல் காலத்தில் தடையை மீறி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் கெடா பகுதியில் அவர் மூலமாக நேற்று மேலும் நால்வருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் அவரது கடைக்கு கடந்த ஜூலை 13 முதல் 24ம் தேதி வரை சென்றவர்கள் அவர்களாக முன்வந்து அருகில் உள்ள சுகாதார மையத்தில் கோவிட் 19 பரிசோதனையை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சுகாதார முன்சேரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் மழலையர் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று தகவல் வெளியான நிலையில் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகளை மூடவேண்டும் என்றும், ஆனால் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms