மலேஷியா : ‘கட்டுப்பாட்டை மீறுபவர்களை சிறையில் அடைப்பதை நிறுத்த வேண்டும்’ – மனித உரிமை ஆணையம்

MCO in malaysia

மலேசியாவில் தற்போது நிலவி வரும் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறுபவர்களை சிறையில் அடைப்பதை மலேசிய அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. இது ஏற்கனவே சிறையில் உள்ள கைதிகள், சிறை ஊழியர்கள் மற்றும் அங்கு இருக்கும் பலரை கொரோனா தொற்றின் ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வாறு நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறுபவர்களை புதிய முறையில் கையாள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் 18 அன்று அமல்படுத்தப்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறியதற்காக மலேசிய அதிகாரிகள் இதுவரை சுமார் 15,000 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். ஆரம்பத்தில் அதிகாரிகள் விதிமீறல் செய்பவர்களை சிறைக்கு அனுப்பினர், ஆனால் சிறைச்சாலைத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, தற்போது தடையை மீறுபவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கின்றனர்.

“இந்நிலையில், இயக்க கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறியதற்காக மக்களை சிறையில் அடைப்பது கொரோனா வைரஸின் பரவலைக் குறைப்பதற்கு எதிர் விளைவிக்கும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் பில் ராபர்ட்சன் கூறியுள்ளார்.