‘சலாம் மலேசியா’ – கொரோனா தொற்றை தடுக்க வழி சொன்ன அமைச்சர்

lee boon chaye

நேற்று ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடந்த தைப்பூச திருவிழாவில் பங்கேற்று பேசிய துணை சுகாதார துறை அமைச்சர் டாக்டர். லீ பூன் சே மலேசிய மக்கள் மற்றவர்களை வரவேற்கும்போது கைகுலுக்கும் கலாச்சாரத்தை விடுத்து, சலாம் மலேசியா என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மலேசியா வரும் வெளிநாட்டவர்களை வரவேற்க அக்காலத்தில் இந்த சலாம் மலேசியா என்ற வார்த்தை பயன்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு மக்கள் மக்கள் செய்வதால், தற்போது உலக நாடுகள் பலவற்றுள் பரவி வரும் கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து விலகி இருக்கலாம் என்று அவர் கூறினார். சீனர்கள் பிறரை வரவேற்கும்போது முன்புறமாக குனிந்து மரியாதையை செய்வர் என்றும் அவர் தெரிவத்தார்.

கைகுலுக்குவதை விட சலாம் மலேசியா என்று கூறுவது மிகவும் நல்லது என்று குறிப்பிட்ட அமைச்சர், சில கலாச்சாரங்களில் பெண்கள், ஆண்களின் கைகளை தொடுவது முறையற்ற ஒன்றாக பார்க்கப்படுவதாகவும் கூறினார். மேலும் கொரோனா என்பது காற்றின் மூலம்பரவும் நோய் அல்ல, அத்தால் இந்த நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமாமலும், தும்மாமலும் இருக்கும்போது இந்த நோய் பரவாது என்று அவர் தெரிவித்தார்.