மலேசியாவில் கொரோனா – தேவையின்றி விலை ஏற்றினால் வணிகர்களுக்கு தண்டனை..?

malaysia

உலகையே அச்சுறுத்தி வருகின்றது கொரோனா என்ற கொடிய அரக்கன், ஒரு ஊசியின் அளவு கூட இல்லாத இந்த நோய் இன்று உலக முழுதும் சுமார் 4500-க்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. மேலும் இந்த நோயின் காரணமாக சுமார் 1.20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது உலக அளவில் இந்த கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை வெறும் 3 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது என்றபோதும் மக்கள் தங்களின் சுகாதாரத்தில் சற்றும் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று மலேஷியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்த நோய்க்கு அஞ்சி பல மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ள நிலையில் ஒருசிலர் அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் குவிகின்றனர், இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் சில வணிகர்கள், பொருட்களின் விலையை உயர்த்தி விற்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இது போன்ற மக்கள் அவதிப்படும் நேரத்தில் விலையை உயர்த்தி விற்கும் வணிகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டை மீறி விலையை ஏற்றி விற்கும் வணிகர்களுக்கு சுமார் ஒரு லட்சம் மலேஷியா ரிங்கட் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது இந்த இரண்டு தண்டனையும் சேர்த்து வழங்கபடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.