கோலாலம்பூர் : ‘எலிகள் உலவிய டோஃபு தயாரிக்கும் நிறுவனம்..?’ – அதிரடியாக இறங்கி சீல் செய்த அதிகாரிகள்

TOFU

கோலாலம்பூரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த டோஃபு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கோலாலம்பூர் மாநகர அதிகாரிகளால் நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பல நிறுவனங்களை கொண்ட இடமாக திகழும் கோலாலம்பூரில் பொதுஜனம் ஒருவர் அளித்த புகாரில் பேரில் குறிப்பிட்ட அந்த நிருவத்திற்கு அதிகாரிகள் சோதனைக்கு சென்றுள்ளனர். டோஃபு தயாரிக்கும் இடத்தில் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் துள்ளி விளையாடியதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உரிய சுகாதார நடவடிக்கைகள் இன்றி தரையில் டோஃபு-க்கள் தயாரிக்கப்பட்டு வந்ததாகவும். அங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் தலையுறை கூட அணியாமல் வேலை செய்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிலும் சில தொழிலார்கள் மேல் சட்டைக்கூட இல்லாமல் அங்கு பணியாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த இடத்தில டோஃபு-க்கள் செய்யப்படும் விதத்தை பார்த்தபின் தனக்கு டோஃபு உண்ணும் ஆசையே வெறுத்துவிட்டதாக அதிகாரி ஒருவாறு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனது. இதனை அடுத்து சுகாதாரம் சற்றும் இல்லாத அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.