மலேசியாவை மிரட்டும் கொரோனா – இரண்டு பெண்மணிகளுக்கு நோய் தொற்று

corona

உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வரும் கொரோனா, சீனாவை தவிர 20 நாடுகளில் பரவி உள்ளது. மேலும் சீனாவை தாண்டி பிலிப்பின்ஸ் நாட்டில் ஒருவர், ஹாங் காங் நாட்டில் ஒருவர் என்று இருவரை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில் மலேசியாவிலும் 12 பேர் இந்த நோய் தொற்றால் பதிகப்படுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மலேசிய அதிகாரிகள் புதிய ஒரு தகவலை அளிதுள்ளதர்.

இந்த தகவலின்படி மேலும் இரண்டு பெண்கள் தற்போது இந்த நோய் தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்படுள்ளது. இதை குறித்து சுகாதார துறை அமைச்சர் அஹமத் கூறும்போது, ஏற்கனவே சீனாவில் இருந்து வந்த ஒரு பெண்மணியிடம் இருந்து மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தற்போது கொரோனா நோய் பரவியுள்ளது என்று கூறியுள்ளார்.

அரசு பரவும் இந்த நோயை தடுக்க முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கபடுவது மலேசிய அரசை கடும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இருப்பினும் மக்கள் அச்சம் கொள்ளாமல், தங்களையும் தங்கள் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துகொண்டால் நிச்சம் இந்த நோய் தாக்காது என்றும் அரசு அறிவுறுத்தி வருகின்றது.