லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் – விமானநிலையத்தில் இருவர் கைது

trichy airport

இந்தியாவில், திருச்சி விமான நிலையத்தில் சுமார் 11 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், மற்றும் வெளிநாட்டு பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுள்ளது.

துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தாமரை செல்வன் என்ற என்ற நபரிடம் இருந்து சுமார் 4 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ‘

இதே போல, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பணம் 7 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.