கொரோனாவால் மலேசியாவில் இருவர் பலி – உலக சுகாதார மையம்

WHO

கடந்த சில நாட்களாகவே மலேசியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருகின்றது. ஆரம்பத்தில் வெகு குறைவான அளவில் மக்கள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்படிருந்த நிலையல் தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த கொரோனா வைரஸ் பரவலால் சுமார் 120 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்தாக மலேசியாவின் சுகதரத்துரை அமைச்சர் டாக்டர் ஆடம் பாபா ஒரு தகவகளை தெரிவித்துள்ளார். மேலும் WHO எனப்படும் உலக சுகாதார மையத்தின் அறிவிப்பின்படி இதுவரை இந்த கொரோனா நோய் தொற்று காரணமாக சரியாக 673 பேர் மலேசிய முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். துரதிஷ்டவசமான நிலையில் இருவர் இந்த நோயின் காரணமாக மலேசியாவில் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக இந்த நோயை எதிர்த்து கடுமையாக போராடி வரும் மலேஷியா இதுவரை எந்த ஒரு உயிரையும் பலிகொடுக்காமல் போராடி வந்த நிலையில் தற்போது இந்த காரணமாக இருவர் உயிரிழந்திருப்பது மலேஷியா மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.