தொழில்நுட்ப கோளாறா..? பயணத்தடையா..? திருச்சி – கோலாலம்பூர் ஏர் ஏசியா விமானம் ரத்து

air asia

மலேசியாவை போல அண்டை நாடான இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ளதையடுத்து இந்தியாவிற்குள் நுழைய எட்டு நாடுகளுக்கு விசா வழங்குவதை இந்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. அதில் மலேசியா இல்லை என்றபோதும் அந்த நாடுகளின் விவரம் பின்வருமாறு, ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ், சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளின் நாட்டு மக்களுக்கு இ-விசா வழங்குவதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு மாதத்துக்கு விசா வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 15 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். மத்திய அரசின் திட்டப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர யாரும் விசா பெற முடியாது.

ஆனால் அத்தியாவசிய மற்றும் அரசுப் பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.20 மணிக்கு கோலாலம்பூர் புறப்படவேண்டிய ஏர் ஆசியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.