COVID – 19 : மலேசியாவில் இதுவரை 98 பேரை பலிவாங்கியுள்ளது கொரோனா – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdulla

கொரோனா தாக்கத்திற்கு பிறகு மலேசியாவில் கடந்த சில வாரங்களாக இந்த நோயின் தாக்கம் சற்று தளர்ந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 26ம் தேதி வெளியான அறிக்கையின்படி மலேசியாவில் 38 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மலேசியாவில் விதிக்கப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பட்டு சிறந்த முறையில் கடைபிடிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது.

அதே போல ‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று பிற்பகல் வரை மட்டும் சுமார் 100 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 3862 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 66.8 ஆக உயர்த்தி உள்ளது.

மேலும் அடுத்த மகிழ்ச்சியான செய்தியாக நேற்று யாருமே மலேசியாவில் கொரோனா காரணமாக இறக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5780 என்பது குறிப்பிடத்தக்கது.